லக்ஷ்மி ரமணன்/தேர்தல்

குறுங்கதை.

                             .

மகேஷ் முகத்தில் சோகமும் ஏமாற்றமும் படர

வீட்டில் நுழைந்தபோது அவன்அம்மா கஸ்தூரி

பூஜை அறையில் இருந்தாள்.

மணி அடித்து மந்திரம்சொல்லி ஆரத்திகாட்டி
பூஜையைமுடித்துவிட்டு வந்த அம்மாவைப்
பார்த்ததும் அவனுக்குக்கோபம் வந்தது
எத்தனை பூஜை, ஆராதனை எதுவுமே உபயோகமில்லாமல் போச்சு.”
“ஏன் என்ன ஆச்சு?”
“எதை எதிர்பாரத்தேனோ அது நடக்கலை”
“என்னடா சொல்லறே”?
“இன்னும் என்னத்தை சொல்லணும். நீ டிவி
பார்க்கலியா?”
“புரிகிறமாதிரி சொல்லேன்.”
“எனக்காக நீ இத்தனை வேண்டிண்டு பூஜை
பண்ணியும் பிரயோஜனமில்லை தேர்தலில்
நான் தோத்துப்போயிட்டேன்”
“அட அப்படியா? வெரி குட் என் வேண்டுதல்
பலிச்சிடுச்சு”
“என்னம்மா சொல்லறே?நான் சொன்னது
புரியலியா?”
“புரிஞ்சுது. என் வேண்டுதலே நீ தோற்றுப்போகணும்தான்”
வாட்?
“கோபப்படாதே. இன்றைய சூழ்நிலையில்
அரசியல் உனக்கு சரிப்பட்டுவராது .நீதேர்த
லில் நிற்க வேண்டாம்னு சொன்னேன். நீ
கேக்கல்லே. பிடிவாதமாய்நின்னே. உன்னைமாதிரி நேர்மை,கடமைவிசுவாசம்
போன்ற உயர்ந்த குணம் கொண்டவனுக்கு
இன்றைய அரசியல் சூழ்நிலை சரிப்பட்டு
வராமல் கஷ்டப்படவேண்டிவருமோன்னு பயமா இருந்தது. அதனால் நீதேர்தலில் ஜெயிக்கவேண்டாம்னு வேண்டிண்டுதான் பூஜை பண்ணினேன். நீ செய்ய நினைக்கிற நல்ல காரியங்களைசுதந்திரமாகவும்
சந்தோஷமாகவும் தனி மனிதனாக நின்றே
செய்யலாம்.அதற்கு ஆண்டவன் அனுக்கிரகம்
எப்போதும் கிடைக்கும்”
அம்மா சொன்னதைக்கேட்டு மகேஷ் திகைத்து நின்றான்.