
அழகிய சிங்கரின் என்பா
இனிமேல் போண்டா திங்க முடியாது
உடம்பில் கொழுப்புச் சத்து அதிகம்;
மருத்துவரின் எச்சரிக்கை காதில் ஒலித்தும் ;
போண்டா ஆசை குறையவில்லை !
இனிமேல் போண்டா திங்க முடியாது
எண்ணெய் விலையில் சாண் ஏற்றம்
உளுந்தின் விலையோ அதைவிட உச்சம்
போண்டா தின்பது சாத்தியமா ?
இனிமேல் போண்டா திங்க முடியாது
நடைப்பயிற்சி குறைந்து போன காரணம்
நாள்தோறும் உடல் எடை அதிகரிப்பு
ஏன் இந்த நப்பாசை ?
15/06/2024

அருமை