
அன்றுமாலை மழை அந்த அளவுக்கு தீவிர
மாகும் என்று சுமித்ரா நினைத்துக்கூடபார்க்
காததால் பிரமித்துப்போனவளாக அந்தப்பக்க
மாக வந்த ஆட்டோவை நிறுத்திக்கேட்டபோது
ஆர்ஏபுரத்திலிருந்துஆள்வார்பேட்டைபோக
அந்த ஆட்டோஓட்டுனர் இருநூறுரூபாய் கட்டணம் கேட்டார்.
“ஏம்பா ரொம்ப அநியாயமாய் இத்தனை ரூபா
கேட்கறியே மழை இல்லாட்டி நான்நடந்தே
போயிடுவேன்”
“நியாய அநியாயம் பார்த்தால்நாங்க எப்படி
பிழைக்கிறது.?” என்று கோபத்துடன்”இது
வராது”என்று விட்டுபோய்விட்டார்.
மழை விட்டபாடில்லை.
“நியாயத்தைப்பற்றி நினைப்பவர்களே இக்
காலத்தில் இருக்க மாட்டார்களோ? “
நினைத்துப்பார்த்தபோது சுமித்ராவுக்கு குழப்பமாக இருந்தது.
எத்தனை நேரம் இப்படிஒரு கடைவாசலில்
நிற்க முடியும்?அவள் யோசிப்பதற்குள்
“திடீரென்று ஒருஆட்டோ வந்து அருகில் நின்றது.
“வாங்க சிஸ்டர் எங்கே போகணும்?”டிரைவர்
கேட்டதும்
ஆள்வார்பேட்டை எத்தனை குடுக்கணும்?
மீட்டரைப்போட்டுவிட்டு”நீங்க இறங்கும் போது
இது சொல்லும்”ஓட்டுனர் சொன்னர்.
” மீட்டருக்குமேல் எத்தனை குடுக்கணும்”
“மேலும்வேண்டாம் கீழேயும் வேண்டாம். நீங்க
ஏறி உட்காருங்க நனஞ்சுடப்போறீங்க”
அவன் சொன்னதும் திகைத்துப்போனவளாய்
ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாள்.
வீடு வந்ததும் இறங்கிய சுமித்ராமீட்டர்காட்டிய
தொகைக்கு மேல் இருபது ரூபாய் அதிகம்
வகொடுத்தாள்.
“அதிகம் வேண்டாம் சிஸ்டர் ,இதுபோதும்”
அதைத்திருப்பிக்கொடுத்ததும் “உங்களை
சந்தித்தது ரொம்ப சந்தோஷம்.நியாயத்துக்கு
கட்டுப்பட்டு நடக்கும் உங்களுக்கு நான்கொடுக்கும் அன்பளிப்பாக இதை ஏன்
நீங்க எடுத்துக்கலாமே”
“நியாயத்தை மதிப்பவனுக்கு அன்பளிப்பு
தேவையில்லை சிஸ்டர். நான் கிளம்பறேன்”
என்றுவிட்டு கிளம்பிய அந்த ஓட்டுனர்
சுமித்ராவை திகைப்பிலாழ்த்தினார்.
