
உன் மனக் கவலைகளை
என்னிடம் தெரிவித்து விடு
ஏன் இப்படி
ஒவ்வொரு இடமாக
நிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறாய்
உனக்கு
உன் பெயரைச்
சொல்லத் தெரியுமா?
நீ எங்கிருந்து
வந்திருக்கிறாய்
அதாவது
தெரியுமா?
உன்னை ஒரு இடத்தில்
பூட்டி வைத்து விட்டார்கள் நீ
வெளியே வரத்
தெரியாமல் கதவைத் தட்டிக்
கொண்டிருக்கிறாய்
உன்
கற்றை முடி
உன் உடல் முழுவதும்
பறந்து கொண்டிருக்கிறது!
