வளவ. துரையன் கவிதைகள்

13-2-26- அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதைகள்

                      2.  ஒண்ணுமே மாறல….


                     ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 
                     அடியேன் சொந்த கிராமம் 
                     திரும்புகிறேன்.

                     நிறைய மாற்றங்கள்தாம்.

                     நான் படித்த நடுநிலைப்பள்ளி 
                     உயர்ந்து இப்போது  
                     ஓர் உயர்நிலைப்பள்ளி.

                     எப்போதாவது வரும்
                     மழைத்துளி போல 
                     வந்து கொண்டிருந்த 
                     ஒரேஒரு பேருந்துக்குப் பதிலாக 
                     நான்கைந்து பேருந்துகள்.

                     அங்கொன்றும் இங்கொன்று…
  1. இடமில்லை

ஒருவர் பின் ஒருவர்
சட்டையைப் பிடித்துக் கொண்டு
தொடர்வண்டி ஓட்டம்

மாலதி வீட்டு வாசலில்
அவளை இறக்கிவிடும்.
வரும்போது ஏற்றிக் கொள்ளும்.

பயணச் சீட்டுகள்
இல்லா இலவசப் பயணம்

வருபவரைப் பொருத்தே
பெட்டிகள் நீளும்.

முதலில் இருப்பவர்
கூக்கூ கத்தியவுடன்
பெட்டிகள் தயாராகிப்
பிடித்துக் கொள்ளும்

கடைசியில் இருப்பவன்
கையே பச்சைக்கொடி

அம்மாவோ அப்பாவோ
அடிக்க வரும்போது
பெட்டிகள் விபத்துக்குள்ளாகும்.
பிரிந்து ஓடிவிடும்.

சட்டைபோடவே
வழியில்லாத
சண்முகத்திற்கு மட்டும்
அங்கே இடமில்லை.
[

  1. துரோகம்

இந்தத் துரோகம்
எனக்கானதே
என்னைக் கொண்டுபோய்
வாழ்வின் எல்லையில்
வைத்து வேடிக்கை பார்க்கிறது.

ஆதரவெனக் கை போட்ட
தோள்களில் இருந்த
அழகான முள்ளெல்லாம்
அழுத்திக் குத்தின.

வந்த குருதியைத்
துடைத்துக் கொண்டு
சற்று முன்னேறினால்
கண்ணிவெடி வைத்துக்
காலைக் காயப்படுத்துகிறது.

அளவுக்கு மீறி நான்
நம்பி விட்டேனென்று
அவமானப் படுத்துகிறீர்

என் நம்பிக்கையால்
வரும் அவதூறுகளை
எதிர்கொள்கிறேன்
எள்ளலோடு.

துரோகத்தை வரவேற்கக்
காத்திருக்கிறேன்
தூள்தூளாக்குவேன்
எனும் தன்னம்பிக்கையுடன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன