கரந்தை இந்து/ஸ்மிதாவின் தலைமுடி

பாஸ்கர், சீதாவின்  ஒரே  செல்லப் பெண்  ஸ்மிதா. பிறக்கும் போதே  குழந்தை  நல்ல தலை கொள்ளா கருகரு முடியோடு  பிறந்தது. 
 சீதாவுக்கு அதில்  ரொம்ப பெருமை. எப்போதும்  விதவிதமாய்  குழந்தையை அலங்கரித்து  போட்டோக்கள்  எடுத்து  எல்லோரிடமும்  காட்டி  ஜம்பம்  அடிப்பது  வழக்கம். அவள் அம்மா  கண்  திருஷ்டி படும்  குழந்தைக்கு  என்று  சொன்னாலும்  கேட்க  மாட்டாள்.
  ஸ்மிதாவுக்கும்  தன்  தலைமுடி  மேல்  பிரியம்  அதிகம். ஆனால்  அவளுக்கு  டைபாய்டு  காய்ச்சல்  வந்ததில்  முடி  கொட்டத்  தொடங்கியது. 
   பயந்து  போய்  எங்கே  தன்  முடியெல்லாம்  கொட்டி  தான்  அழகின்றி  போய் விடுவோமோ என  எண்ணி அவள் தன் முடியை  முன்னால்  விட்டு  இறுகப்  பிடித்தபடி  தலை  சாய்த்து  வருந்தி  அழுதாள்.
 சீதா  அவளிடம்  ஆறுதலா  அணைத்தபடி ஸ்மிதா கவலைப்படாதே,  இந்தக் காலத்தில் முடி  வளர  நிறைய  வழிகள் இருக்கு,  சீக்கிரம்  வளர்ந்திடும்  என்றாள்.

நேற்று இல்லாத மாற்றம் – ஸ்ரீராம் – விருட்சம் நாளிதழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன