
வழிபாட்டுத் தலங்களுக்கும்
மருத்துவமனைகளுக்கும்
நடந்து நடந்து
கால் வலித்து
மனமுடைந்து
தன் வீட்டுத் திண்ணையில்
அமர்ந்திருக்கும்
குழந்தையில்லா தம்பதி விடும்
சோக மூச்சை
சுவாசித்துக் கொண்டு
கிளை விரித்து
பூ காய் கனியென
எல்லாம் உள்ளடக்கிய
ஒரு நிமிர்ந்த மரம்
காற்றோடு கொண்டு சேர்க்க
முயற்சிக்கிறது
தாய் தந்தையில்லா
ஒரு குழந்தைக்கு!
நெருப்பு விழிகள்
