தொகுப்பு ஸ்ரீதர் சாமா/விண்ணை வணங்குங்கள். மண்ணை வணங்குங்கள்

தெய்வப்பற்றுடன் தேசப்பற்றைப் போற்றுவது ஆன்மிகம். ஒரு உண்மை தேசப்பற்றாளன் வாழ்வில் சமீபத்தில் நடந்தது இது. கடல் மட்டம் மேல் 20,000 அடி உயரத்தில் சியாச்சின் பகுதியில் படை வீரர் அன்ஷுமன் சிங் பணியாற்றினார். 2023 ஆம் ஆண்டு ஜூலை 19 ம் தேதி அவர் காவல் காத்த எல்லைப் பகுதியில் ஒரு வெடி விபத்திலிருந்து 3 சக வீரர்களைக் காப்பாற்றினார். அந்தத் தீயே அவரைக் கொன்றது. அவர் மனைவி சொல்கிறார்: நானும் அவரும் 8 ஆண்டுகள் காதலித்தோம். திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் அந்த சிரமமான எல்லைப் பாதுகாப்பு பணி வந்தது. “கடமை அழைக்கிறது. என் காதல் காத்திருக்கும் ” என்று சொல்லிவிட்டுச் சென்றார். முதல் நாள் நீண்ட நேரம் புது மனைவியிடம் பேசும்போது ஒரு 50 ஆண்டு திட்டம் சொன்னார். சொந்த வீடு வேணும். குழந்தை வேணும். குழந்தை நல்ல பள்ளியில் படித்து பேர் வாங்கணும். 24 மணி நேரத்தில் ஒரு இளம் காதலன் கனவு குலைந்தது.

ஆகவே இளைஞர்களே நம்மைச் சுற்றி நிறைய பேர் தியாகங்கள் செய்வதால் தான் நாம் நடமாடுகிறோம். எனவே வெறுமனே வார நாள் என்றால் மெகா சீரியல், விடுமுறை என்றால் OTT, ஸ்விக்கி என்று பொழுதை வீணாய் கழிக்காதீர்கள். இருக்கிற கொஞ்ச நாட்கள் ஆக்க பூர்வமாய் செலவழியுங்கள்.