மனதுக்குப் பிடித்த கவிதை 166/அழகியசிங்கர்

தனசக்தி கவிதை

பியூலாவின் யானைக்கு
பட்டாம்பூச்சியின் சிறகுகளை
வரைந்திருந்தேன்
கடலின் அலைக்கும்
யானையின் நடைக்கும்
அத்துனை ஒற்றுமை
இரண்டுமே பேரழகாய்
ஒளிரக்கூடியவை
பியூலா கண்களுக்கு
எட்டா தூரத்தில்
காற்றில் கலந்த பின்பும்
அவளுக்குப் பிடித்த பட்டாம்பூச்சி
வீட்டுப் புழக்கடையில்
செம்பருத்திச் செடியின்
வேரில் உறங்கும் அவளைக்
காண வந்தமர்ந்துகொண்டே
இருந்தது ஒவ்வொரு நாளும்
அந்தப் பட்டம்பூச்சியைத்தான்
யானையாக மாற்றியிருந்தேன்

நன்றி : பியூலா – கவிதைகள் – தனசக்தி – வெளியீடு : புது எழுத்து – தொலை பேசி : 6374230985 – பக்.240 – விலை : ₹ 200