
14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 2
தலைவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்
கீழே தொண்டர்கள் உட்கார்ந்து கேட்கிறார்கள்.
கீழே இருப்பதால் இவர்கள் தொண்டர்கள்
தலைவர் எப்பொழுதும் மேலேதானே
தலைவருக்குத் தெரியும்
தன் பேச்சை அவர்கள் கேட்பதில்லையென்று
அவர்களுக்கும் தெரியும்
தமக்காக நம் தலைவர்
பேசவில்லையென்று
அவர்கள் தம்மை விட்டுப்
போய்விடக் கூடாதென்று
அவர் பேசிக் கொண்டிருக்கிறார்
அவர் இன்னும் பேசவேண்டுமென்று
அவர்கள் சும்மா இருக்கிறார்கள்
ஒவ்வொருவருக்கும்
புலிவாலைப் பிடித்த கதைதான்
அதோ அவர் இன்னும்
பேசிக் கொண்டிருக்கிறார்
———————-

One Comment on “வளவ.துரையன்/பேச்சு”
Comments are closed.