
14-11-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை3
இந்தத் துரோகம் எனக்கானதே
என்னைக்
கொண்டுபோய் வாழ்வு எல்லையில்
வைத்து வேடிக்கை பார்க்கிறது
ஆதரவெனக் கைபோட்ட தோள்களில் இருந்த
அழகான முள்களெல்லாம் அழுத்திக் குத்தின
வந்த குருதியைத் துடைத்துக்கொண்டு
சற்று முன்னேறினால் கண்ணிவெடி
வைத்துக் காயப்படுத்துகிறது
அளவுக்கு மீறி நான் நம்பிவிட்டேனென்று
அவமானப்படுத்துகிறீர்
என் நம்பிக்கையால் வரும் அவதூறுகளை
எதிர்கொள்கிறேன்
எள்ளலோடு
துரோகத்தை வரவேற்கக் காத்திருக்கிறேன்
தூள் தூளாக்குவேன் எனும் தன்னம்பிக்கையுடன்

One Comment on “வளவ.துரையன்/துரோகம்”
Comments are closed.