
14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4
இந்த மழைத்துளி இதோ வந்துகொண்டிருக்கிறது
வானம் எனும் ஊரிலிருந்து
நெடுந்தொலைவு பயணம் செய்து
மண் நோக்கி வரும்
இதை வரவேற்க நினைக்கிறேன்
மனத்துள் மத்தாப்பை ஒளிரச் செய்து
மகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்
உயிர்நிலைக்காக
நான் உவகையுடன் காத்திருக்கிறேன்
விதை முளைத்துக் கிளம்பி விறுவிறென்று
மேல்நோக்கித் தலைகாட்டிச் சிரிக்கின்ற
நாளுக்காக விழுகின்ற தோழமை அது
ஒன்றிரண்டாய் மட்டுமன்று நான்கைந்தாய்ப்
போதாது ஓராயிரமாய்ப்
பல்லாயிரமாய்ப் படையெடுத்து
வருகவெனப் பதைபதைக்கக்
காத்திருக்கிறேன்
வெளிச்சக் கீற்றுகளும் வெடிச்சத்தமும்
துணையாக வந்துவிடும்
இந்நாளை எழுதிவைப்பேன்
மனத்துள்ளே

Arumai !🙇♀️👏🙏