
இந்த வாரக்கடைசில நடக்கப்போற கச்சேரிக்குள்ள நம்ம கஞ்சி காமேஸ்வரன் வந்துடுவானோன்னோ…. சாம்பு வித்வான் தன் குழுவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார்.
ஊம்….நாம இத்தனை பேரு இருந்தாலும் அவன் வந்து கூஜா தூக்கணும் இவருக்கு…முணுமுணுத்தனர் குழுவினர்.
காமேஸ்வரனின் ஜால்ரா இணைந்து கச்சேரி நல்லபடியாக முடிந்தது.
இவன் தாளத்துக்காகத் தட்டுற இந்த ஜால்ரா மட்டுமில்லாம… என்னைப்பத்தி தேவைக்கு அதிகமா ஏத்திப்பேசறது…. மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியல.. என்னோட சரீரமும், சாரீரமும் அதனாலதான் இன்னமும் உயிர்ப்போட இருக்கு…..
கச்சேரிக்கு வருகை புரிந்த பெரியவர் ஒருவரிடம் கூறிப் புன்னகைத்தார் சாம்பசிவம் கனபாடிகள்.
