ஸ்ரீராம்/சிவாபாரம்

“என்னடா சிவா? டெய்லர் கடையில எல்லாருக்கும் தைத்த துணில மிச்சம் இருந்த ‘பிட்’ எல்லாம் வச்சு உனக்கு சட்டை தைச்சு கொடுத்துட்டானா?” என்று கூறி சிரித்த நாராயணனை தாண்டி விந்தி விந்தி நடந்தான் சிவா.
‘ உங்களுக்கெல்லாம் வேடிக்கையா இருக்கு. எனக்கு வேதனையா இருக்கு. வெளியில கூட சொல்ல முடியல. உங்க எல்லார் வீட்டிலும் செய்யற பரிகார பூஜைகள்ல கலந்துக்கறதுக்கு என்னைதான் கூப்ட்டு கூப்ட்டு சாப்பாடு போட்டு, அவங்க அவங்க செஞ்ச பாவங்களை சாப்பாடு மூலம் என் மேல ஏத்தி விட்டுடறாங்க. கண்ணாடில என்னையே நான் பார்த்துக்குக்கும்போது இந்த சட்டையே எல்லார் பாவமும் என் மேல் ஏறி இருக்கறத காட்டற மாதிரி இருக்கு…. . உங்க கண்ணுக்கு தெரியாத இன்னொரு விஷயமும் என் கண்ணுக்கு தெரியுது. இந்த மாதிரியான எண்ணங்களோட தவிப்புல என்னுடைய மண்டையே பெருசாகிவிட்டே வர்ற மாதிரியே இருக்கு… வயித்துப்பாட்டுனால என்னால வெளில கூட சொல்ல முடியல….’

4 Comments on “ஸ்ரீராம்/சிவாபாரம்”

  1. பிரமணார்த்தம் சாப்பிடுபவர்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும். அதைத்தான் இக்கதையில் உணர்கிறேன்

Comments are closed.