
தலையில் சிறிய குடுமியும் , நெற்றியில் நாமமும் , பஞ்சகச்சம்,ஜிப்பாவும் அணிந்த அந்த இளைஞர்கள் இறைவன் நாமத்தை பாடியபடியே இசைக்கருவிகளுடன் ஊரின் ஊடே நடந்து கொண்டிருந்தார்கள்.
” பார்க்க எல்லாம் படிச்ச வசதியான பிள்ளைங்க போல இருக்கு. இவங்களுக்கு வெளிநாட்டு பணம் வந்துட்டு இருக்கும். வேலைக்குப் போயி பெத்தவங்களை கவனிக்காம இப்படி பாட்டு பாடிட்டு திரியுதுங்க”.
ஒருவன் மட்டும் சற்று பின்தங்கினான்.
” ஐயா, நாங்க எல்லோருமே ஐஐடி ல படிச்சு முடிச்சுட்டு லட்சக் கணக்குல சம்பாதிக்கிறோம். இந்த வயதில் கிடைக்கிற அபரிமிதமான பணம் அதன் உண்மையான உபயோகம் என்ன என்று யோசிக்க வச்சது. அதிகப் பணம் ஒருவரிடம் தேங்குவதற்கு அல்ல.சில சின்ன ஊர்களைத் முழுதும் தத்து எடுத்து, இயலாதவர்கள் படிப்புக்கும், வழிகாட்டுதலுக்கும், வாழ்வுக்கும் என்று எங்க செலவில் பராமரிக்கிறோம்.”
சொன்னவர் வாய் பிளந்து கேட்டுக் கொண்டு இருந்தார்.
” அதையும் தாண்டி வாழ்வின் உண்மையான நோக்கம், அடைய வேண்டிய இடத்தை நோக்கி பயணப்பட, எங்களுக்கு இளம் வயதில் கிடைக்கும் வசதிகள் எங்கள் கவனத்தை சிதற வைக்காமல் , எளிமையாக, நன்றியுடன் , தரையில் காலூன்றி நடப்பவர்களாகவே என்றும் இருக்க, இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் “.
கேட்டவர் பதில் ஏதும் சொல்லுமுன் தம்புராவை மீட்டிக் கொண்டே தன் குழுவினருடன் இணைந்து கொண்டான் அந்த இளைஞன்.

அருமையான கதை
நன்றி அக்கா
மிக அருமையாக உள்ளது.
மிக்க நன்றி
வாழ்க்கையில ஒரு ஸ்டேஜைத் தாண்டிய பிறகு மனம் ஆன்மீகத்தில்தான் செல்லும். வேறு வழிகள் எதுவும் இல்லை. மேலை நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் மன அமைதியைத் தேடி இந்தியா வருவதன் நோக்கமும் இதுவேதான். நல்ல கருத்தைச் சொல்லும் கதை. வாழ்த்துகள் மா