
மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
அந்தக் காலத்தின் கவலை
பீர்க்கை போல்
பெண் வளர்ந்து வருகிறாள்
என்று
தாவணி அணியும்வரை
மார்பிற்குக் குறுக்கே புத்தகங்களை
வைத்துக்கொள்ளும் அவஸ்தை
பெண்களுக்கு
ஆக
இருப்பவற்றை எப்படி
மறைத்துக் கொள்வது
என்ற தவிப்பு அக்காலப்
பெண்களுக்கு
ஆனால்
எப்படி காண்பிப்பது என்ற துடிப்பு
இக்காலப் பெண்களுக்கு
கவுன், மிடி,
மினி ஸ்கர்ட், ஷார்ட்ஸ் என
மேலே மேலே சென்று
டாப்ஸ், பிளவுஸ், நெக் லைன்
கீழே கீழே இறங்கி
தொப்புளின் ஆழத்தை,
மார்பின் உயரத்தை
வெளிப்படுத்தும் போது
பென்கள் எவ்வளவு சுதந்திரமாக
வளையம் வருகிறார்கள் என்று
மகிழ்ச்சி அடைவதா
பெண்மை காணாமல் போய் விட்டதே
என்று கவலை கொள்வதா
பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு
இடையில்
இடைவெளி நசிந்து விட்டதென்று
மகிழ்வதா?
எப்படியானாலும்
மூடியிருக்கும் உள்ளங்கைதான் ரகசியம்
ஒளிவுமறைவுதான் அழகு
வெட்ட வெளிச்சமாக்கி விட்டால்
என்ன எஞ்சும்?

நல்ல கவிதை வாழ்த்துகள்