S. அர்ஜுனன்/ பெண்ணொன்று கண்டேன்..

“டேய் ரிஷி.. இந்த படத்தைப் பாருடா..” என்று அம்மா காண்பித்த படத்தில், ஒரு பெண் தன் பத்து கைகளாலும் வெவ்வேறு வேலை செய்துகொண்டு, மடியில் ஒரு குழந்தையை வைத்து பாலூட்டுவதாக இருந்தது.
“இது மாதிரி தான்டா உனக்கு பொண்ணு பார்க்கணும்.. வேலைக்கு போனாலும் வீட்டிலயும் எல்லா வேலையும் அவளே பார்க்கணும்..” என்று அவரே தொடர்ந்தார்.
“நீங்களே ஒரு பெண்ணாய் இருந்துகிட்டு ஏன்மா இப்படியெல்லாம் நினைக்கிறீங்க..?”
“ஹவுஸ் மெய்ட் போடுறதெலாம் சரி வராதுடா.. வேலை சுத்தமாவே இருக்காது..”
“சரிம்மா.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு ஃபோட்டோ காண்பிக்கிறேன்..” என்று சொல்லி, தனது மொபைலில் இருந்து ஒரு ஹுமனாய்டு(ரோபோ) படத்தை காட்டினான்.
“இது சாதாரண பொண்ணு இல்லமா.. ஒரே நேரத்தில நூறு வேலை பார்க்கும்.. அத்தோட மாமியா மருமக சண்டையும் இருக்காது..” என்றான் சிரிப்புடன்.
“அதுசரி.. என்ன இருந்தாலும் இது மெஷின் தானே..? பிள்ளை பெத்து தருமா..?” கேட்டாள் அம்மா.
“அதைத்தான்மா நானும் சொல்றேன்.. வரப்போற மருமக மெஷின் இல்ல.. சில வேலைகளை ஹவுஸ் மெய்ட் போட்டு செய்றதிலயோ, வீட்டில மத்தவங்க உதவி செய்றதிலையோ எந்த தப்புமில்லை..” என்று ரிஷி சொல்ல, திகைத்துப் போய் நின்றாள் அவனது அம்மா.

சுஸ்ரீ/தசாவதானி தாரகேஸ்வரி – விருட்சம் நாளிதழ்