சந்தியா ஷங்கர்/”புத்தகங்களின் மாநாடு”

தத்துவம் பேசும் புத்தக குழுமம்:

“என்ன நண்பர்களே! இன்னிக்கு மாநாட்டின் தலைப்பு என்ன? என்னவாருந்தாலும் எங்க குழு தான் வெற்றி பெற போகிறது. ஹ ஹ ஹ ஹ ஹா. இன்னிக்கு ஜனங்களுக்கு சாப்பாடு தண்ணியை விட தத்துவம் தான் வேண்டிருக்கு. அது எங்க கிட்ட நிறையவே இருக்கு. ஆளுக்குக்காள் சமூக வளைதளம், வாட்சப் மற்றும் எந்த சொற்பொழிவானாலும் தத்துவம் பேசி தான் ஆரம்பிக்கறாங்க இல்ல முடிக்கறாங்க..”
அறிவியல் புத்தக குழுமம் : “அய்யா! எல்லோருக்கும் வணக்கம் 🙏. இவங்க என்னமோ ஆளராமாதிரி பேசராங்க.. நாங்க தான் முக்கியமானவர்கள். எங்க குழு பெயர்லேயே அறிவு ன்னு இருக்கு பாருங்க.. மனுஷன் ஆதிகாலத்திலிருந்து ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சதெல்லாம் எங்க கிட்ட தானே இருக்கு. உங்கள மாதிரி வெறும் தத்துவம் மட்டும் பேசினா அவனால எதையும் கண்டுபிடிச்சிருக்க முடியது. இப்ப கூட பசங்க எங்க குழு ஆளுங்க கிட்டதான் குறிப்பு தேடி எடுக்கிறாங்க. அவங்களுக்கு மேலும் ஆராய்ச்சியை தொடர நாங்க தான் ஆரம்ப பள்ளி.. “
வரலாறு புத்தக குழுமம் :” நீங்க இரண்டு பேரும் பேசரது ஏதோ ஓரளவுக்கு சரினாலும் எங்க குழு மாதிரி வருமா? நம்ம நாடு போக உலகின் எந்த இடத்தையும் பற்றின வரலாறு எங்க கிட்ட தானே இருக்கு. அலெக்சாண்டர், சேரன் சோழன் பாண்டியன், கொலம்பஸ் மற்றும் பல்வேறு அரசர்களும், ஸ்தலங்களில விவிவரங்களை எங்கிற கிட்டதான் தெரிஞ்சிக்கிராங்க.”
இப்படி பேசி பேசியே மத்தியம் ஆனது. அதற்குள் நகைச்சுவை புத்தக குழுமம் சார்பில் பேச ஆரம்பித்தார்கள்.
நகைச்சுவை குழுமம் :.” எல்லருக்கும் பணிவான 🙏. இந்த காலத்தின் நெரிசல், டென்ஷன் மற்றும் தட்டுபாட்டுகளின் ஒருத்தன் உயிர் வாழ நகைச்சுவை தான் வேண்டியிருக்கிறது. தத்துவத்திலும் லேசான நகைசுவை, அறிவியல் படித்து படித்து குழம்பிப் போய் இருக்கும் போது கூட எங்கள படிச்சு ஒரு சின்ன புன்சிரிப்பு வருமே அது தான் ஒரு மனுஷனுக்கு மருந்து. இப்பெல்லாம் அங்கங்கே லாஃப்டர் கிளப் ன்னு வச்சு சிரிக்க வைக்குறாங்க. நகைச்சுவை இல்லேனா பயித்தியமே பிடிக்கும்”.
அதற்குள் மாநாட்டின் தலைவர் அரசியல் வாதி வருகிறார்..” என்ன இது! ஒரே பழைய புத்தகங்களையெல்லாம் சேர்த்து வச்சிகிட்டு! எல்லாத்தையும் தூக்கி போடுங்க. இந்த ஹாலில் கட்சி ஆபிஸ் திறக்க போறோம். உடனே செயல்படுங்கள் “என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார்.