
14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த இரண்டாவது கவிதை
புலம் பெயர்ந்து போகிறது
பறவையாக இந்த மனது
வானம் என்பதும்
நீரற்ற கடல் தான் என்பதை
கண்டு கொண்ட நொடியில்
வாழ்க்கையை திரவமாக்கி
கரைத்து விடத் தோன்றுகிறது
அற்றைத் திங்கள்
சிறகு விரித்தாடியதும்
அலகோடு அலகு புதைத்து
ஆனந்தக் கூத்தாடியதும்
ஞாபகத்திலிருக்கும்
ஒரு கனவேயன்றி
வேறொன்றில்லை இப்போது
கடவுளே உயிர்ப்பு என்பது என்ன ?
வாழ்க்கை என்ற கற்பாறையின் மீது மோதி மோதி
துயர நதியில்
கரைத்துக்கொண்டு
நேசிக்கும் இதயங்களுக்கு
தன்னை
விண்டு விண்டு தரும்
ஒரு கொடை தானோ?

One Comment on “தங்கேஸ்/புலம் பெயர்தல்”
Comments are closed.