தங்கேஸ் கவிதை

14/11 / 25 இணைய வழி கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை

பௌதிகமான தூரத்தை
என் மனதினால் கடந்து
உன்னிடம் வருகிறேன் சகி

உயிரினை உருக்கும்
தனித்துவமான
என் மூச்சுக்காற்று
ஒரு முறையேனும்
கடல் கடந்து வந்தாகிலும்
உன் சுவாசத்திற்குள் நுழைந்து விடும்
என்ற நம்பிக்கையில் தான்
நான் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்

தங்கேஸ்/புலம் பெயர்தல் – விருட்சம் நாளிதழ்