நாகேந்திர பாரதி /நெஞ்சுக்கு நிம்மதி 4

அழகியசிங்கரின் சொல் புதிது (14 th நவம்பர்) நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள்

நேரத்தைக் கடந்தால்
எல்லாமே இப்போதே

தூரத்தைக் கடந்தால்
எல்லாமே இங்கேயே

பாரத்தைக் கடந்தால்
எல்லாமே இலேசாக

நேரமும் தூரமும்
பாரமும் நினைப்பே

நினைப்பினைக் கடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி