
அந்தக் கலைக்கல்லூரி கலைஇயக்குநர்…முன்மாதிரியாய் வைத்த முகத்தை….
அவரவர் பாணியில் ஓவியமாய் …களிமண் சிற்பமாய்…காகிதக்கூலில்…மற்றும் குப்பையென ஒதுக்கப்பட்ட பொருள்களில்
பல்வேறு விதமாய் கலைபயிலும் மாணவர்கள் வடிவமைத்து இருந்தார்கள்.
வித்யா மட்டும் களிமண்ணை பிசைந்துவைத்துவிட்டு…ஒன்றும் செய்யாமல் மாதிரிக்கு வைத்த முகத்தை வெறித்தபடி
இருந்தாள்.
கலைபயிற்றுவிக்கும் ஆசிரியர் அனைவரது படைப்புகளும் பார்வையிட்டு…
சில திருத்தங்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தபடி வந்தார்.
வித்யா அருகில் வந்ததும் அவள் எதுவும் செய்யாமல் களிமண்ணை வெறித்தபடி இருப்பதைக்கண்டு…
…”வித்யா என்ன பிரச்சனை?” என்றார்
கவலையுடன்…?
அவள் ஒன்றும் சொல்லாமல் கண்ணீருடன் அவரை ஏறிட்டு நோக்கினாள்….
சொற்கள் எதுவும் வரவில்லை…
வறுமையில் அவளது தந்தை மாடலாய் நின்றுகொடுத்தமுகம்தான்…அது.இன்று அவர் இல்லை. அந்த
முகத்தைப் பார்த்ததும் அவள் செயல்இழந்து போனதை எப்படிச் சொல்லுவாள்.

One Comment on “அனங்கன்/முகம்”
Comments are closed.