ரேவதி ராமச்சந்திரன்/அன்பின் வளைவில்

4/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 2

மௌனத்திற்கும் அமைதிக்கும்
தனிமைக்கும் ஏகாந்தத்திற்கும்
சிரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும்
உள்ள வித்தியாசம்
நம்மிடையேயும் உள்ளது!
ஆனாலும்
அன்பின் வளைவில் சேரும்போது
நான் நீயாகிறேன்
நீ நான் ஆகிறாய்
உன் வீடு
எனக்கு கோயில் ஆகிறது
என் வீடு உனக்கு
ஆலயம் ஆகிறது!

ரேவதி ராமச்சந்திரன்/காணவில்லை – விருட்சம் நாளிதழ்