
14/11/25இணையக்கவியரங்கம் வாசித்த கவிதை. 2
உள்கட……..
கலீல் ஜிப்ரான்
பெண்பூசாரி கேட்டார்
‘இறைவழிபாடு பற்றிச் சொல்லுங்கள்’
அவரின் விடை வந்தது
துயரமும் தேவையும்
நெருக்கத்தானே உமது
வழிபாடு
மகிழ் நிறைவும் வாழ்செழிப்பும் உறுதிப்படுகிறது.
அத்தருணம்இறை வழிபாடு ஏதுமுண்டா?
இறைவழிபாடென்பது
உம்மையே விரித்து வாழும் பெருவெளியொடு ஏகமாகிவிடும் அனுபவம்
உமது இருள் துயரத்தை மாத்திரமா பெருவெளியொடு பகிருதல்
இதயம் மலருதலை மகிழ்வையும் கூட்டித் தான்.
ஆன்மா வழிபாடென்று
அழைப்பு விடும் போதெல்லாம்
அழுகை அழுகை
ஆன்மா கடையப்படுதல்
தொடர்கிறது
தொடரும்
அழுகை அது மகிழ் சிரிப்பாகும்வரை.
வழிபடு போதெல்லாம்
வான்வெளியில் வழிபடு.
பிறரோடு சந்திப்பு
வழிபாடில்லை எனில் அச்சந்திப்புத்தான் நிகழுமா?
ஆலயத்துக்குச் செல்கிறாய் தேடும் அது
கண்ணுக்குத்தெரிந்தாலென்ன
இல்லை என்றால் என்ன
ஆனந்தப் பரவசமும்
இனிய சந்திப்பும் நிச்சயம். வேண்டும் இது
வேண்டும் அது
இப்படித்தானா செல்வாய் ஆலயம்
கேட்பது கிடைத்து விடுமா குறுகி குறுகிக்
கெஞ்சி அஞ்சியுமா நீ
எப்படி கிட்டும் உயர்வு
அடுத்தவன் ஒருவனுக்கு
நன்மையே வேண்டுமென ஆலயம் போனதுண்டா ?
உன் வேட்டல்
அவன் செவி அப்போதும்
ஏறாது
கண்ணுக்குப்புலனாகா
ஆலயம் நின்னுள்
கட உள்
எப்படிக்கடப்பது நான்
சொல்லவும் மாட்டேன்
கடவுள் நீ சொல்வது கேட்கவும் மாட்டார்
அவராக உன்வாய்வழி
வந்து
ஏதும் உரைக்க
அது கேட்கும் அவர்க்கு
கடலும் மலையும் வனமும்
பிரார்த்திக்கிறது
உனக்கு அது கற்பிக்க முடியுமா
கடலொடு மலைவனம்
நின் பிறப்பிற்கு ஆதாரம்
நின் இதயம் அறியும் அது
நடுநிசிப்போதில்
அவைகளின் வேட்டல்
கவனி அது கேட்டிருக்கும்
கடவுள் நம் இருப்புக்கும்
நம் விருப்புக்கும் மூலம்
கடவுளின் விருப்பே
உள்ளேபோய் நம்விருப்பாகிறது
நம் முன் பகலும் இரவுமாய்
மாறி மாறி விரிவது
இறைவிருப்புத்தான்
யான் என்ன கேட்க
என் தேவை யாவும்
இறை முன்னம் அறிந்து
எம்பாற் பின்னே பிறப்பது
இறை நீயே எமது விருப்பு
நின்னை எமக்கு நீயே கொடுக்கிறாய்
யாமனைத்தும் பெறுகிறோம்.

One Comment on “எஸ்ஸார்சி/கலீல் ஜிப்ரான்”
Comments are closed.