ரேவதி ராமச்சந்திரன்/காணவில்லை

14/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 1

கட்டிலில் தேடினேன்
அலமாரியில் பார்த்து விட்டேன்
வீடு முழுவதும் சல்லடை போட்டு விட்டேன்
பக்கத்தில் இருப்பவர்களைக் கேட்டு விட்டேன்
கண்ணாடியிலும் பார்த்தேன்
எங்கும் என்னைக் காணவில்லை
ஒரு தடவை உன்னை சோதித்துப் பார்
நான் உன்னுடன் வந்து விட்டேனா என்று!

One Comment on “ரேவதி ராமச்சந்திரன்/காணவில்லை”

Comments are closed.