
நான் பெரிய பக்தன் இல்லை
ஆனால் என் கிராமத்தில்
வீரன் என்ற தெய்வம் குறித்து ஆச்சரியப்படுகிறேன்!
முன்பு
நான் கொண்டு வந்த
புத்தகங்கள்
அமோகமாக விற்க வேண்டுமென்று விண்ணப்பத்திக்
கொண்டேன் வீரனிடம்!
பின்
அதை நானும் மறந்து
விட்டேன்
வீரனும் மறந்து விட்டார்!
சமீபத்தில்
நான் எழுதிய கதை ஒன்றை
பத்திரிகை ஆசிரியர் வீரன் கோயில் என்று
மாற்றி பிரசுரம் செய்துவிட்டார்!
அன்றிலிருந்து என் கவனம்
எல்லோருக்கும் போயிற்று.
நான் எழுதியது கதை
என்றாலும் யாரும் நம்பவில்லை.
அப்படியா எழுதுவது
உண்மைச் சம்பவத்தை என்கிறார்கள்.
ஒரு அனுபவத்தைக் கடந்து இன்னொரு அனுபவத்திற்கு
வருகிறோம்
முதல் அனுபவம் என்ன சொன்னாலும் திருப்பிச் சொல்லும் அனுபவம்தான்.
கற்பனைதான்
இதை யாரும் நம்பப் போவதில்லை..
வீரனும் ஒர் அனுபவம்தான்…
12.07.2025
6.38 pm
