
இன்று வந்துவிட்டாள்
அம்மா!
மழையும் கூட
உள்ளே
என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்
ஆசீர்வாதம் செய்துவிட்டுப்
போ என்றேன்.
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
உன்னைப் பற்றி
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்
வீண் வேலை
எதாவது உருப்படியாய்ச் செய்
ஏன்?
யாரும் படிக்க மாட்டார்கள்
போகட்டுமென்றேன்
யார் கவிதைகளை யார் படிப்பார்கள்
யாரும் யார் கவிதைகளையும் படிப்பதில்லை
ஏன் அவர்கள் கவிதைகளையே
அவர்கள் படிப்பதில்லை
அம்மா உன் ஆசீர்வாதம் வேண்டும்
வெளியே மழை நின்று விட்டது
அம்மா போய்விட்டாள்
(இன்று அம்மா த்வசம்.)
