
தபாலில் வந்த
இலக்கிய பத்திரிகையின் பக்கங்களைச் சேர்த்து
குத்தப்பட்ட ‘ஸ்டேப்ளர் பின்’ னை
தன் கையில் படாமல் லாவகமாக எடுத்து
குப்பைத் தொட்டியில் போடப் போனவனை தடுத்து,
அதை பழைய காகிதத்தில்
சுற்றிப் போட்டாள் அவள்,
பின்னால்
அது குப்பை அள்ளுபவரின்
கையைக் குத்தாமலிருக்க
2/11/2024
