
அவர்கள் வாழ்க்கை திரும்பவும் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன், அவர்கள் தங்களுக்குள் நடந்த திருமணப் பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.
அவன் அவளை நேசிப்பதில் எந்தக் குறையுமில்லை.
ஆனால் அவள் அளவுகடந்து பேசுவதால் அவனால் அவளுடன் சேர்ந்து வாழ முடியாது என்று நினைக்கத் தொடங்கினான்.
திருமணம் ஆன தினத்திலிருந்து அவள் பேசுவதை நிறுத்த முடியவில்லை. ஒரு நிமிடம் கூட அவளால் எதாவது பேசாமல் அமைதியாக இருக்க முடியாது.
அவள் பேச ஆரம்பித்தால் எப்போது நிறுத்துவாள் என்பதும் தெரியாது.
தினமும் தொணதொண வென்று அவள் பேச்சைக் கேட்டு அலுவலகத்தில் கூட அவனால் ஒழுங்காக வேலை செய்ய முடியாமல் போய் விட்டது.
அவர்களுக்குள் மணமுறிவு நடந்தது. அது ஒரு சோகம்தான். அவன்தான் அதற்கு அவள் சம்மதிக்க வேண்டுமென்று சம்மதம் வாங்கி விட்டான். அவள் வருத்ததுடன் அவனைவிட்டுப் பிரிந்தாள்.
எல்லாம் நல்ல விதமாய் முடிந்தது. எங்காவது பார்க்கும்போது அவன் அவளைப் பார்த்து நலமாக இருக்கிறாயா என்று விசாரிப்பான்.
அவள் அவளைச் சுற்றி இருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருப்பாள். üநீ பேசியதை அஞ்சியா அவன் உன்னை விட்டுப் போய்விட்டான்,ý என்று அவளைப் பார்த்து துக்கம் விசாரிக்காமல் இருப்பதில்லை.
ஒரு நாள் அவனிடம் அவள் ஒரு வேண்டுகோள் விடுத்தாள். அவனிடம் மட்டும் ஒரு வேண்டுகோள் விடுத்தாள். üநாம் இருவரும் திரும்பவும் சேர்ந்து வாழ்வோம். ஆனால் உன்னிடம் மட்டும் எப்போதும் பேசப்போவதில்லை,ý என்றாள்.
அவன் மகிழ்ச்சியுட ன் அவளுடன் சேர்ந்து வாழத் தொடங்கினான். அவள் சொன்னபடி அவனிடம் அவள் எதுவும் பேசுவதில்லை.
இப்போதோ அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பிறந்ததிலிருந்து அக் குழந்தை மட்டும் அவனிடம் தொண தொணவென்று பேசுகிறது.
