அழகியசிங்கர்/ தீபாவளியும் அம்மாவும்

ஐம்பது ஆண்டுகள் முன்
ஒரு சம்பவம் நடந்தது
அம்மா
இறந்து விட்டாள்
அப்போது தீபாவளி முடிந்திருந்தது
மழை கொட்டு கொட்டென்று
கொட்டியது
அன்றிலிருந்து
ஒவ்வொரு ஆண்டும்
அம்மா வருகிறாளென்றால்
மழையோடுதான்
வருவாள்
ஆசி வழங்குவாள்
அப்போது
மழை பேசும்
அம்மாவும் பேசுவாள்
புரியாத மொழியில்