செ.புனிதஜோதி கவிதை

நீ வளர்த்த
ரோஜா செடி தான்
கேட்டவுடனேவா
மலர் தருகிறது?

ஐந்து விரல்களுக்குள்ளும்
சிறு இடைவெளியும்
ஏற்றத் தாழ்வும் உண்டு

காற்று
வளைக்க
நினைத்த போதுதான்
முறிந்துவிடுகிறது
கிளை

நதியின் கால்களை
உன் திசைகளுக்கேற்ப
திருப்ப நினைக்கிறாய்

கொத்த,கொத்த
முதுகை காட்டும்
எருமை அல்ல நான்

தன் சிறகு காட்டும்
திசையில் பறக்கும்
சுயம்பு பறவை.

One Comment on “செ.புனிதஜோதி கவிதை”

Comments are closed.