அழகியசிங்கர்/புதுமைப் பித்தனின் கலியாணி கதை

துளி – 221

புதுமைப்பித்தனின் கலியாணி கதையைப் படித்தீர்களா?  சமீபத்தில் நான் அக் கதையைப் படித்தேன். அசந்து விட்டேன்.  அக் கதையைப் படிக்கும்போது எனக்கு உடனே ஞாபகத்திற்கு வந்தது. மௌனியின் சாவில் பிறந்த சிருஷ்டி என்ற கதை.
இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமை உண்டு. வயதானவர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்போது மிகக் குறைந்த வயதுள்ள ஏழைப் பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
இரண்டாவதாகத்  திருமணம் செய்துகொண்ட பெண்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதில்லை. 
கலியாணி வேறு ஒருவருடன் ஓடிப் போகலாமா என்று நினைக்கிறாள். ஆனால் அப்படிப் போகவில்லை.  மௌனி கதையும் அப்படித்தான். 
நான் 11 கதைகளைத் தேர்ந்தெடுத்து புதுமைப்பித்தன் கதைகள் தொகுதி 1 என்ற தொகுப்பை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறேன்.
111பக்கங்கள் கொண்ட   இப் புத்தகத்தின் விலை ரூபாய் 120.  சலுகை விலையாக ரூ.100 தர விரும்புகிறேன்.

கூகுள் பேயில் 9444113205 பணம் அனுப்பினால் புத்தகம் உங்களுக்கு வந்து சேரும்.