ப.மதியழகன்/பூனைகள்

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த இரண்டாவது கவிதை
கவிதை எண்: 2

பூனைகளை வெறுக்கிறேன்
நாய்களை வெறுக்கிறேன்
ஆடு, மாடுகளை வெறுக்கிறேன்
மனிதர்களை நேசிக்கிறேன்

பூனைகளை நேசிக்கிறேன்
நாய்களை நேசிக்கிறேன்
ஆடு, மாடுகளை நேசிக்கிறேன்
மனிதர்களை வெறுக்கிறேன்

புலால் உண்பவர்கள்
ஜீவகாருண்யத்தைப் பற்றி
பேசுகிறீர்கள்

பரமசிவன் கழுத்திலிருந்து
கேள்வி கேட்டால்
பதில் சொல்லத்தான்
வேண்டும்

ப.மதியழகன்/விடிவெள்ளி – விருட்சம் நாளிதழ்