
19-9-25 விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த இரண்டாவது கவிதை
என் அன்பை முழுதும் உறிஞ்சி எடுத்துச்
சக்கையாகத் துப்பினாய்.
புழுதிப் புயலில் உயரே பறக்கும்
வெற்றுக் காகிதமானேன்.
கள்ளி கற்றாழையில் கவனம்வைத்துக்
கண்களில் கவசம் மாட்டினாய்
மலரின் மணத்தைவிட முள்கள்
பெரிதென்று முகம் சுளித்தாய்.
எல்லாம் தெரிந்திருந்தும் தவிக்கிறேன் நான் தாய்முலை
வேண்டுமென அடம் பிடிக்கும் குழந்தையாய்

One Comment on “வளவ.துரையன்/அடம்”
Comments are closed.