வளவ.துரையன்/அடி

19-9-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 3

கொடுப்பது தவறா?
கொள்கையே தவறா?

எல்லார்க்கும் வழங்குபவனைச் சோதிக்க வந்தாய்.
ஏமாற்றலாம் என்பதைத் தெரிந்துதான் வந்தாய்.

உரு சிறியதானால் மனமும் அப்படியே.
கேட்காமலேயே அழித்திருக்கலாமே.

மூன்றடி கேட்டபோது இருந்த அடிதானே
அளக்கும்போதும் இருக்க வேண்டும்.

யார் செய்வார் பஞ்சாயத்து?

வளவ.துரையன்/அடம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “வளவ.துரையன்/அடி”

Comments are closed.