வளவ.துரையன்/அடையாளம்

19-9-25 அழகியசிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4

எங்கே அடையாளம்?


எல்லாவற்றுக்கும் ஓர் அடையாளம் இருக்கிறது.
சில வீடுகளுக்கு 786
சிலவற்றுக்குச் சிலுவை
சில வாசல்களில் நாமமும்
இன்னும் சிலவில் பூசையும்
பச்சை
வண்ணம் அடித்த வீடு
இரு வேப்பமரங்கள் முன்னால்
இருக்கும் வீடுகள்
மனிதர்களுக்கும் பெரிய
மீசை வைத்திருப்பார்.
அவர் தலை வழுக்கை
மந்தை ஆடுகளுக்குக் கூட
மேய்ப்பர் வைத்திருப்பார்
நல்ல கவிதைக்குத்தான்
இங்கு அடையாளம் ஏதும் இல்லை.

வளவ.துரையன்/அடி – விருட்சம் நாளிதழ்