வளவ.துரையன்/அக்கறை

19-9-25-கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை

பால்காரர்
நனைந்து
கொண்டே வந்துதான்
பால் ஊற்றுகிறார்.

காய்கறி மீன் விற்போர் மழைச்சத்தம் மீறித்தான் கூப்பாடு போடுகிறார்கள்.

குடையில்லாப் பிச்சைக்காரன்
குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளான்.
நனைந்த காக்கைகள் உடலைச் சிலிர்த்து
அண்ணாந்து பார்க்கின்றன.

நடைபாதைக் கடையில் போட்டு வைத்து போண்டா பஜ்ஜி என்னாகுமோவெனும் கவலை.

எதைப்
ப ற்றியும்
அக்கறையின்றிப்
பெய்து கொண்டிருக்கும் மழை.

—-

One Comment on “வளவ.துரையன்/அக்கறை”

Comments are closed.