
19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 2
தன் இருப்பை பறைசாற்றும் இருளின் ராஜ்ஜியத்தில்
உன் கண்கள் பச்சையத்தை உமிழ்கின்றன
திரவம் போல எனக்குள் பாயும் அது
அசைவற்றுப் போக என்னை வசீகரிக்கிறது
மானை கவ்விப் போகும்
சிறுத்தையைப் போல
என்னை கவ்விப் போகிறது
உன் பார்வை
பற்களில் தோன்றும்
சிவப்புத் தீற்றல்
நாவில் ருசிக்க
ஒரு மிடறு குடிக்கிறாய்
பிறகு நிறுத்தவேயில்லை
காலத்தின் மீது கிடத்தப்பட்ட உடலை
வெறித்தபடி
இரையாகிக்கொண்டிருக்கும் எனக்கு
முழு விழிப்புணர்வுடன் இருப்பதே
சகிக்கவொன்னாததாகிறது
உன் அன்மையில் நான் மட்டும்
ஏன் விலங்காக முடிவதில்லை என்பது
தீராத ஆச்சரியமாகிக்கொண்டே போகிறது எனக்கு
தங்கேஸ்/எத்தனை கோடி கடல்களைசுமந்தலைகிறோம் நாம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “தங்கேஸ்/பிணக்கு”
Comments are closed.