தங்கேஸ்/எத்தனை கோடி கடல்களைசுமந்தலைகிறோம் நாம்

19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 1

போகும் தூரம் கால்களில் இல்லை
வானத்தை புள்ளியாக்கும்
மனதிற்கு
பறவையிடமிருந்து கடனாகப்
பெற்ற இறகு தான் சுதந்திரம்

என்றாலும்
பறப்பதற்குத் தான்
விரிகிறது வானம்
நான் இரவில்  அதை
ஒரு சாக்கு மூட்டையாக கட்டி
பரணில் போட்டு வைத்தேன்
காலையில் பார்த்தால்
எண்ணற்ற சாக்கு மூட்டைகள்
கிணற்றுக்குள் விழுந்த
ராமனின் கணையாழிகள் போல
நின்றுலவும் நினைவுகளை
மனமென்று  நீ சொன்னால்
அதை உற்பத்தி செய்யும்
கடல் தான் அது என்பேன்
நான்
கடல்தான் அது என்று
நீ  ஒத்துக் கொண்டால்
எத்தனை கோடி கடல்களை
சுமந்தலைகிறோம் நாம்
என்றுநான்உன்னிடம் கேட்பேன் .

One Comment on “தங்கேஸ்/எத்தனை கோடி கடல்களைசுமந்தலைகிறோம் நாம்”

Comments are closed.