ப.மதியழகன்/விடிவெள்ளி

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த முதல் கவிதை
கவிதை எண்: 1

விடியலையே பார்த்திராதவர்களுக்கும்
சேர்த்துதான்
வெளிச்சத்தை அனுப்புகிறான்
சூரியன்

சோறூட்ட தாய்
காத்திருப்பாள் என்பதற்காகவே
தினமும் ஆஜராகிவிடுகிறான்
சந்திரன்

அம்மாவின் சேலை
கிழிசல் போலவே இருக்கிறது
அமாவாசை இரவு வானம்!

One Comment on “ப.மதியழகன்/விடிவெள்ளி”

Comments are closed.