
19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 3
எண்ணங்களை எவ்வளவு காலம்
குடித்து உயிர்த்திருப்பது?
ஈரம் கசியும் விழிகளில் திரள்வது
உயிரின் பிரதிமை என்றால்
அதற்கேது உரு ?
உண்மையில்
நம் முன்னே மலையென
வளர்ந்திருக்கும்
மெளனத்தை உடைக்க முடியாமல்
முட்டி முட்டி சாகும் எறும்புகள்தானே நாம்?
எதன் பொருட்டு வாழுகிறாய்
என்று கேட்டால்
இதன் பொருட்டு
அதன் பொருட்டு
என்று சொல்லவும்
ஒரு பொருட்டேயில்லாத வாழ்க்கை
வாய்த்திருப்பது
எத்தனை பைத்தியகாரத்தனமானது
நீயே சொல்?

2 Comments on “தங்கேஸ்/உரு”
Comments are closed.