அழகியசிங்கர்/வெள்ளைப் பூனை

வெளியே குதிக்க விரும்பவில்லை?

ஏன் என்று கேட்டேன்?

உன்னை விட்டுப்
போக விரும்பவில்லை
நான் போய்விட்டால்
உனக்கு யாரும் இருக்க
மாட்டார்கள் என்றது

உண்மைதான். துன்பம் வரும்போது உன்னைப்
பார்த்தால்
நிம்மதி அடைவேன்
என்றேன்

(விருட்சம் 128வது அட்டைப் படத்தைப் பார்த்து எழுதியது)