ஈசி கோதுமை ஹல்வா செய்வது எப்படி…

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு – 1/2 கப்
சீனி – 1 கப்
ஏலப்பொடி — 1/4 ஸ்பூன்
முந்திரி – 6
குங்குமப்பூ – 1 சிட்டிகை
நெய் – 1/4 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் சீனி சேர்த்து கரைந்ததும், ஏலப்பொடி பாதியும், குங்குமப்பூவையும் சேர்த்து வைக்கவும்.(விருப்பப்பட்டால் கலர் சேர்க்கலாம்)

சீனி பாகு

அடி கனமான வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.

நெய்யில் முந்திரி

அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து கலர் மாறும் வரை கைவிடாமல் கிளறவும்.

நெய்யில் கோதுமை

மாவு பாதி கெட்டியானதும் கொதிக்க வைத்த சர்க்கரை நீரை சேர்த்து கிளறவும்.

சர்க்கரை நீர்

நெய் பிரிந்து வரும் பொழுது வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.

ஈசி கோதுமை ஹல்வா

சுவையான எளிமையாக ஹல்வா தயார்

திண்டுக்கல்சமையல்