
ஆழ்கடலில் அமைதியாக இருப்பாய்
நிலம் கண்டால் மகிழ்ச்சியோடு
அலை அலையாய் ஆர்ப்பரிப்பாய்
உன்னுள் உறையும் உப்பு, நீரை
ஆதவன் துணையுடன் வானேற்றி
பெரு மழையாய் கன மழையாய்
நன்னீரை அளித்து
மாதர் தம் வாழ்வினை
செழிக்க செய்வாய்
கரை வாழ் மக்கள் வாழ்வின்
ஆதாரமாக இருந்து
வேண்டும் வளங்கள் அளிப்பாய்
சர்வதேச வணிக ஊர்திகளை
சுமந்து சென்று
வாணிபத்தை வாழ வைப்பாய்
முத்து, பவழம் எனும் ரத்தினங்களை
வாரி வழங்குவாய்
இவையனைத்தும் செய்யும் நீ
வளர்ந்து , நீர் பெருகி , பொங்கினால்
உலகமே அழியும் எனும் கூற்றை
மனம் நம்ப மறுக்கிறது
வளங்கள் பல அளிக்கும் உன்னால்
உலகை அழிக்கவும் முடியுமோ?
