புதிர் /க நா சு

புரிந்தது பாதி
அதில் தெளிந்தது காலே அரைக்கால்
வார்த்தைகளில் வடித்தது கால்
அதில் புரிய வைத்தது அரைக்கால்

இதுவே போதும்
புதிரை வெடித்து விட்டேன்
என்று மார் தட்டிக்
காலங் கழிக்கும்
கலிகள் குலம்
நான்.