சுவற்றுக்கோழி/க நா சு

சுவற்றுக் கோழி இரவு பூராவும்
கத்துகிறது – அதற்கென்ன கவலையோ
தெரியவில்லை. எனக்கும் தூக்கம்
வரவில்லை. புத்தகங்களைப் புரட்டுகிறேன்
ஆனால் புத்தகத்து வார்த்தைகள்
சுவற்றுக் கோழியாக ஒலிக்கின்றன.

பகலில் சுவற்றுக் கோழியின் கவலைகள்
ஏக்கங்கள் கீதம் எங்கே போயிற்று
அது தன் காதலியுடன் கூடிக் கவலைகளை
மறந்திருந்தது என்று நீ சொன்னால்
நான் நம்ப வேண்டுமா?
யாராவது விஷய மறிந்தவர்களைக்
கேட்டுத் தெரிந்து கொள்வோம்.