ஓவியர் கிருஷ்ணமூர்த்தி-சில நினைவுகள்/வெளி ரங்கராஜன்

ஓவியர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய பல நினைவுகளிலிருந்து இதை எழுதுகிறேன்.அவருடைய சித்திரமே ஒரு மேகமூட்டம் படிந்த பழைய ஓவியம் போல் உள்ளது.அப்போது சத்யஜித்ரே, மிருணாள்சென், மணிகெளல்,அரவிந்தன் போன்றவர்களுடைய கலைப்படங்கள் சூழ கலைசினிமா குறித்த ஒரு எழுச்சி மிகுந்த காலகட்டம்.நான் அந்த படங்களைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் கிருஷ்ணமூர்த்தி நீண்ட குர்தா அணிந்து தன்னுடைய சகோதரியுடன் நடந்து வருவதைப் பார்க்கும்போது அந்தக் காட்சி சத்யஜித்ரே படத்துக்கான ஒரு முன்னோட்டம் போலவே தோன்றும்.அவரை நான் சத்யஜித்ரே படத்தில் வரும் பாத்திரமாகவே நினைத்துக்கொள்வேன்.அப்போது நான் அவருடன் அதிகம் பேசியதில்லை.ஆனால் அந்தப் படிமமே போதுமானது போல் தோன்றும்.ஏற்கனவே கசடதபற இலக்கியப் பத்திரிகையில் வந்த அவருடைய ஓவியங்களைப் பார்த்து உலகியலும்,கவிதையும் சந்திக்கும் ஒரு இடத்திலிருந்து அவர் இயங்கிக் கொண்டிருப்பதான ஒரு எண்ணம் தோன்றும்.கசடதபற உருவாக்கிய ஒரு புத்திலக்கிய எழுச்சியுடன் அதை இணைத்துப் பார்க்கும்போது கிருஷ்ணமூர்த்தி மிகமிக அண்மைப்பட்டவராக தோற்றம் கொள்வார்.அவருடன் பேசிக்கொள்ளாமலே அவர் பற்றிய அபிமானத்தை வளர்த்துக்கொண்டிருந்தேன்.இந்தப் படங்கள் ஏதோ வகையில் பல்வேறு இலக்கிய உரையாடல்களுக்கான தளங்களாக இருந்தன.ஜீ.வி.ஐயருடன் இணைந்து கிருஷ்ணமூர்த்தி இயக்கிய படமும் அவர் குறித்து ஒரு ஆழ்ந்த உணர்வு ஏற்பட உதவியது.கலை சினிமா மற்றும் தீவிர இலக்கியம் இவை குறித்த உரையாடல்களில் எல்லாம் கிருஷ்ணமூர்த்தியின் ஏதாவது ஒரு படிமம் இடம்பெற்றிருந்தது


‘என்னுடைய உடல்மொழியின் கலைபுத்தகத்திலிருந்து’