பஷீர்

பஷீர் சிறையில் இருக்கும் போது., அவர் இருந்த சிறைக்கு அருகில் பெண் கைதிகளின் சிறைச்சாலை இருந்திருக்கிறது. இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மதில் சுவர் இருந்திருக்கிறது. பெண்கள் சிறையில் நாராயணி என்ற பெண், கைதியாக இருந்தாள். அவளது குரலை மட்டுமே அறிமுகமாகக் கொண்டு பஷீர் நாராயணியிடம் பழகத்துவங்குகிறார். அவர்களுக்கு இடையிலான உரையாடல் தான் மதில்கள் கதை. ஒரு முடிவாக பஷீர் நாராயணியை சிறை மருத்துவமனையில் சந்திக்க திட்டமிடுகிறார். சந்திப்பிற்கு முதல் நாள் பஷீருக்கு விடுதலை கிடைக்கப் போகும் செய்தியை சொல்கிறார் சிறைக்காவலர். ”Why Should I be free? Who wants freedom??” என்று சிறைக்காவலரிடம் வாக்குவாதம் செய்கிறார் பஷீர்.

”மதில்கள்” நாவலை சினிமாவாக இயக்க அனுமதி கேட்டு ’அடூர் கோபாலகிருஷ்ணன்’ பஷீரிடம் வருகிறார். அப்போது பஷீர் “அந்த நாராயணி கேரக்டருக்கு யாரை நடிக்கவைக்கிறதா உத்தேசம்?” என்கிறார் கிண்டலாக.

அதற்கு ’அடூர் கோபாலகிருஷ்ணன்’ வாய்விட்டுச் சிரித்தார். ஒரு சிறை வாழ்க்கையை பஷீரை விட இவ்வளவு சுவாரஸ்யமாக ஒருவர் சொல்லிவிட முடியாது.

’அடூர் கோபால கிருஷ்ணன்’ திரைக்கதை எழுதி இயக்க, மம்முட்டி நாயகனாக நடித்து ’மதிலுகள்’ திரைப்படம் 1990’ல் வெளிவந்தது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த படம் என நான்கு தேசிய விருதுகளையும் ஒரு மாநில விருதையும் பெற்றது அந்த படம். அது மட்டும் இல்லாமல் வெனிஸ் உட்பட பல வெளிநாட்டு திரைப்பட விழக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது.

இணையத்தில் படித்தது

(முகநூலில் ஆர். கந்தசாமி )

May be an image of one or more people

88