
கெளதம் அதானி, என்.டி.டி.வி.யை கபளீகரம் செய்துவிட்டார். என்.டி.டி.வி. பங்குகளை பின்வாசல் வழியாக வாங்கி, அதன் சுதந்திரத்தைப் பறித்துவிட்டார் என்ற பேச்சுகளைத் தொடர்ச்சியாக கேட்டு வந்தேன்.
இன்று, அதே என்.டி.டி.வி., பங்குச் சந்தைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இருதரப்பும் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, நாங்கள் எங்களுடைய பெரும்பாலான பங்குகளை அதானி குழுமத்துக்கு வழங்க முடிவு செய்திருக்கிறோம்” என்று பிரனாய் ராயும், ராதிகா ராயும் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருக்கும் என்.டி.டி.வி.யின் 32.26 சதவிகித பங்குகளில், 27.26 சதவிகித பங்குகளை அதானி குழுமத்துக்கு விற்றுவிட முடிவு செய்துள்ளனர். தங்களிடம் 5 சதவிகித பங்குகளை மட்டும் வைத்துக்கொள்ளவிருக்கின்றனர்.
அவர்கள் பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கீழ்க்கண்ட வரிகள் முத்தாய்ப்பானவை:
”அதானி குழுமம் ஒபன் ஆபர் வழங்கிய பிறகு, நாங்கள் கெளதம் அதானியோடு மேற்கொண்ட கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்தது; நாங்கள் வழங்கிய அனைத்து ஆலோசனைகளையும் அவர் நேர்மறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஏற்றுக்கொண்டார்.”
{“Since the open offer (by Adani Group) was launched, our discussions with Gautam Adani have been constructive; all the suggestions we made were accepted by him positively and with openness.”}
போதுமா? ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். இது ஒரு கார்ப்பரேட் நடைமுறை. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்குவதும் விற்பதும் சகஜம்.
வெளியே பேசப்படும் பேச்சையெல்லாம் காது கொடுத்துக் கேட்காமல், யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து, தம்மிடம் இருக்கும் பங்குகளை, அதானி குழுமத்துக்கே கொடுக்க முன்வந்திருக்கிறார் புத்திசாலியான பிரணாய் ராய்.
