சூனியம்/க நா சு

ஓன்றுமில்லை என்பது தான்
சிதம்பர ரகசியம்
இருந்தாலும் இல்லாததைத்தேடி
இல்லாததைக் காண
உலகத்தை வெங்காயமாக
உரித்து உள்ளே
எதுவுமில்லை என்று காட்ட
எத்தனை முயற்சிகள்
இல்லாததற் கெல்லாம்
சாக்ஷியாக
இருக்க வேண்டும் என்பதுவே
உலக நியதியோ?

(ஞானரதம் பெப்ரவரி 1986